யுத்தத்தின் போது இடம்பெற்ற விடயங்களை கண்டறிவதே உண்மையான நல்லிணக்கம் – பிரிட்டன்
இலங்கையில் யுத்தத்தின் போது இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக உண்மையை கண்டறிவதே நல்லிணக்கத்திற்கான முதல் நடவடிக்கை என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் ஹியுகோ சுவையர் தெரிவித்துள்ளார்.
இலங்கை குறித்த விசாரணை அறிக்கையை வெளியிடுவதை தாமதிப்பது என ஐக்கிய நர்டுகள் மனித உரிமை பேரவை இணங்கியுள்ள போதிலும் குறிப்பிட்ட அறிக்கை செப்டம்பரில் நிச்சயமாக வெளியாக வேண்டும் என்பதில் தனது அரசாங்கம் உறுதியாகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஐக்கிய நாடுகளின் இந்த முடிவு குற்றவாளிகள் தப்புவதற்கு காரணமாக அமைந்துவிடக்கூடாது என சர்வதேச மன்னிப்பு சபை எச்சரித்துள்ளது.
இலங்iயில் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பது அவசியம். சித்திரவதைகள், பாலியல் துன்புறுத்தல்கள், காணமற்போனவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள் நீண்ட காலமாக இந்த அறிக்கைக்காக காத்திருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசியபசுவிக்கிற்க்கான இயக்குநர் ரிச்சட் பெனெட் தெரிவித்துள்ளார்.
அறிக்கையை தாமதமாக்குவதன் மூலமாக மேலும் வலுவான அறிக்கையை வெளியிடமுடியும்,மேலும் இந்த விடயத்தில் விடயத்தில் உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதாக இலங்கை அரசாங்கம் சமிக்ஞைகளை வெளியிட்டுள்ளது என்று கருதினால் மாத்திரமே அறிக்கையை தாமதமாக்குவதை நியாயப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை கவுன்சில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்,சாட்சியமளிக்க வருபவர்கள் அச்சுறுத்தப்படுவது குறித்து கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.