இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் நரேந்திர மோடி தீவிர அக்கறை
இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தீவிர அக்கறை கொண்டுள்ளதாக, பாஜகவின் தேசிய செயலர் முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தீவிர அக்கறை காண்பித்து வருகிறார்.இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு, 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் படி அவர், முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திடம் அவர் வலியுறுத்தி வந்தார்.
அதுபோலவே, தற்போதைய மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா அரசாங்கத்திடமும், 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி வருகிறார்.
மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காணும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.