மஹிந்தவை தேர்தலில் போட்டியிட வைக்க எதிர்கட்சி முயற்சி!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட வைப்பதற்கான முயற்சிகளில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை விரைவில் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார்.
அத்துடன் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து அண்மையில் நுகேகொடையில் நடத்தப்பட்ட பிரசாரக் கூட்டத்திலும் அவர் கலந்துகொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.