அரசாங்கத்தின் அழைப்பை நிராகரித்தார் பிரதம நீதியரசர் சிறீபவன்
உடுகம நீதிமன்றக் கட்டடத் தொகுதியைத் திறந்து வைக்க, அரசாங்கம் விடுத்த அழைப்பை உயர்நீதிமன்ற பிரதம நீதியரசர் சிறீபவன் நிராகரித்து விட்டதாக, நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நீதிமன்றங்களைத் திறந்து வைப்பது நீதிபதிகளின் பொறுப்பு அல்ல என்றும். அது அரசாங்கத்தின் கடமை என்றும், அவர் தன்னிடம் கூறியதாகவும் விஜேதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.உடுகம நீதிமன்றக் கட்ட்டத் தொகுதி திறப்பு விழாவிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
தனது இந்த நிலையை தெளிவுபடுத்தியதற்காக பிரதம நீதியரசருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, நீதிபதிகளை அரசியல்வாதிகள் நிகழ்வுகளுக்கு அழைக்கக் கூடாது என்றும், ஊழல் அரசியல்வாதிகளுடன் நீதிபதிகள் அமர்ந்திருந்தால் நீதித்துறை மீதான நம்பகத்தன்மையை மக்கள் இழந்து விடுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.