புலிகளின் தாக்குதலுக்கு பயந்தே ஜனாதிபதி மாளிகையில் நிலத்துக்கு கீழ் பதுங்குகுழி
இலங்கை ஜனாதிபதி மாளிகையில் நிலத்துக்கு அடியிலான பதுங்குகுழி கட்டமைப்புகள் பல அமைக்கப்பட்டிருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மகிந்தவின் ஆட்சிக்காலத்தில், அவரது கட்டுப்பாட்டில் இருந்த ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை பற்றிய பல இரகசியங்கள் இப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்தநிலையில், ஜனாதிபதி மாளிகையில் நிலத்துக்கு அடியில், பதுங்குகுழி போன்ற கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவை விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல் இடம்பெறலாம் என்ற அச்சத்தினால் போர் நடந்த காலத்தில் கட்டப்பட்டவை என்று தெரியவந்துள்ளது.கொங்றீட்டினால் வலுவான முறையில் இந்த நிலத்தடி பாதுகாப்பு அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.