Breaking News

யாழில் காணாமல் போனோரின் உறவுகள் போராட்டம் -2ம் இணைப்பு (படங்கள் இணைப்பு)

ஆட்சி அமைத்துள்ள புதிய அரசு காணாமல் போனவர்கள் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும் இன்று யாழ்.பஸ் நிலையத்தில் 9.30 மணியலவில் போராட்டம் நடைபெற்றது.

அதன் பின்னர் யாழ்.பஸ் நிலையத்தலிருந்து கச்சேரி வரை பேரணி சென்று மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்துள்ளனர்.இந்த போராட்டத்தில் தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் காணாமல் போனோரின் உறவுகள் போன்றோர் கலந்து கொண்டுள்ளனா்.

புதிய அரசு உருவாகிய பின்னர் காணாமல் போனவர்கள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடாத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நேற்று முல்லைத்தீவிலும் கடந்த வாரங்களில் மன்னார்,கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் இடம்பெற்றன. இந்த நிலையில் இன்று யாழ்.நகரில் குறித்த போராட்டம் நடாத்தப்படுகின்றது. குறித்த போராட்டத்தை மன்னார் மற்றும் வவுனியா பிரஜைகள் குழுவினர் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

யாழில் இன்று அரசியல் கைதிகள், காணாமல் போனோரின் உறவுகள் போராட்டம்

காணாமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பில் பொறுப்புக் கூறலை வலியுறுத்தியும், அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும் இன்று யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தவுள்ளது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெற்ற போராட்டங்களைத் தொடர்ந்தே இன்று யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தின் முன்பாக இன்று காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்தப் போராட்டங்களை வவுனியா, மன்னார் மாவட்டங்களின் பிரஜைகள் குழு, 'நாங்கள்' இயகத்தினர் நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.