Breaking News

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி கையெழுத்துப் போராட்டம்

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி நேற்று முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை பதாகையில் கையொப்பம் திரட்டும் நடவடிக்கையை முன்னிலை சோஷலிஸக் கட்சியால் நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
 
நேற்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் முன்பாக இந்தக் கையெழுத்து திரட்டும் நடவடிக்கைஆரம்பிக்கப்பட்டது. கோட்டை ரயில் நிலையத்தின் முன்பாக காட்சிப்படுத்தப்பட்டிருந்த வெள்ளை நிற பதாகையில், 'அரசியல் கைதிகளை விடுதலை செய்!', 'காணாமல் ஆக்கப்படுவதை - கடத்தல்களை வெளிப்படுத்து!','குமார் குணரட்னத்தின் அரசியல் உரிமையைப் பறிக்காதே!' என வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. 

இதேவேளை நேற்று ஆரம்பமான இந்தக் கையெழுத்து வேட்டை நாடு முழுவதும் கொண்டு செல்லப்படவுள்ளது. இதற்கமைய இன்று களுத்துறையிலும், நாளை காலியிலும், நாளைமறுதினம் அநுராதபுரத்திலும், 9 ஆம் திகதி கேகாலையிலும், 10ஆம் திகதி பதுளையிலும், 11ஆம் திகதி கண்டியிலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது