தெஹிவளையில் மட்டுமே புலிகள் உள்ளதாம் - ரவி கருணாநாயக்க
இந்த நாட்டில் தெஹிவளை விலங்குகள் சரணாலயத்தில் மட்டுமே புலிகள் உள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் நுகேகொடையில் நடைபெற்ற கூட்டத்தில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தால், உயிர் பெறுவது இந்நாட்டிலுள்ள வேறு யாருமில்லை புலிப்பயங்கரவாதிகளே என தாம் தெரிவித்திருந்ததாக தூய ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்தக் கருத்துக்கு பதிலளிக்கையிலேயே நிதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.நாட்டில் புலிகள் உள்ளதாக பொய் சொல்லி மக்களை ஏமாற்றி வருகின்றனர் அது மட்டுமல்லாது தற்போது யுகம் முடிவடைந்து விட்டது எனவும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.