Breaking News

ஈழத்தமிழர்களுக்கு நீதிகோரி பல்கலையில் திரண்டனர் பல்லாயிரக் கணக்கானோர்! (படங்கள் இணைப்பு)


ஈழத்தமிழர்களுக்கு நீதி கோரி யாழ்.பல்கலையில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

 இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா. விசாரணை அறிக்கையை விரைவில் வெளியிடுமாறு வலியுறுத்தியும், இறுதிப் போரில் அரச படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கோரியும் யாழ். பல்கலைக்கழக சமூகத்தின் கவனயீர்ப்புப் போராட்டம்  நடைபெற்றது.

 இன்று  காலை 10 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் இருந்து ஆரம்பமாகிய இப்பேரணியானது  இராமநாதன் வீதியூடாக பலாலி வீதியை அடைந்து கந்தர்மடம் சந்தியில் திரும்பி நல்லூர் கோவிலின் வடக்கு வீதியை அடைந்தது. 

அங்கு ஆசிரியர் சங்கத்தின் தலைவர் மட்டும் உரை ஆற்றினார். அதன் பின்னர் ஐ.நாவுக்கு அனுப்பி வைக்கப்படும் மகஜரை ,மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையிடமும் இந்து குருமார்களின் தலைவரிடமும் ஆசிரியர் சங்கம். மாண,ர் ஒன்றியம் மற்றும் ஊழியர் சங்கமும் இணைந்து  கையளித்தனா் 

இவ் பேரணியில் பல்கலைக்கழக சமூகத்தினர், மற்றும் சிவில் அமைப்புக்கள் அரசியல் கட்சிகள், காணாமல் போனோரின் உறவுகள்,சர்வமதத் தலைவர்கள் போன்ற பலர் கலந்து கொண்டனர்.