Breaking News

உலக கிண்ணப் போடிகளில் அவுஸ்­தி­ரே­லிய பொப் பாடகிகள்

உலக கிண்ணத் தொட­ருக்­கான ஆரம்ப விழாவில் அவுஸ்­தி­ரே­லிய பொப் பாடகி­க­ளான ஜெசிகா மௌவ்போய், டினா அரினா ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். சர்­வ­தேச கிரிக்கெட் சபையின் 11ஆவது உலக கிண்ணத் தொடர் அவுஸ்­தி­ரே­லியா மற்றும் நியூஸி­லாந்தில் எதிர்­வரும் 14ஆம் திகதி ஆரம்­ப­மா­கின்­றது.

 இதனை முன்­னிட்டு எதிர்­வரும் 12ஆம் திகதி மெல்போர்ன், கிறைஸ்ட்சர்ச் மைதானங்­களில் இரு ஆரம்ப விழாக்கள் நடை­பெ­று­கின்­றன. மெல்­பேர்னின் சிட்னி மயர் மியூஸிக் பௌல் என்ற திறந்­த வெளி மைதா­னத்தில் நடக்கும் விழாவில், அவுஸ்­தி­ரே­லி­யாவை சேர்ந்த பொப் பாட­கி கள் ஜெசிகா மௌவ்போய், டினா அரினா மற்றும் பாட­கர்கள் நெத­னியல், டேரல் பிராத்வைட் பங்கேற்கின்றனர்.