அமெரிக்கா செல்ல முடியாத நிலையில் கோத்தபாய
போரில் இடம்பெற்றதாக கருதப் படும் போர் குற்றங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய முக்கிய நபரான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, அமெரிக்க குடியுரிமை இருந்தும் அங்கு செல்ல முடியாத நிலைமையை எதிர் நோக்கியுள்ளார்.
சர்வதேசத்திற்கு மத்தியில் அவர் குற்றவாளியாகி இருப்பதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தனது சகோதரர் தோல்வியடைந்ததை அடுத்து கோத்தபாய வின் மற்றுமொரு சகோதரரான பசில் ராஜபக்ஷ அமெ ரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார்.
இலங்கையில் கைது செய்யப்பட்டால் அது பார தூரமான நிலைமையாக இருக்காது என் பாதலும் சர்வதேசத்தில் கைது செய்யப்பட்ட பாரதூரமான நிலைமையை எதிர்நோக்க வேண்டியேற்படும் என்ற சந்தேகம் காரணமாகவும் கோத்தபாய அமெரிக்காவுக்கு செல்லவில்லை என பேசப்படுகிறது.
எது எப்படி இருந்த போதிலும் மகிந்தவின் தோல்விக்கு பின்னர் கோத்தபாய ராஜபகஷ மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட் டுள்ள போதிலும் அவரை கைது செய்ய தற்போதைய அரசாங்கம் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகிறது.