சிறையிலுள்ள ஜெயக்குமாரியை சந்திக்க மகள் விபூசிகாவிற்கு அனுமதி
விடுதலைப்புலிகளை மீள் உருவாக்க ஒத்துழைப்பு வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு கடந்த 11 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கிளிநொச்சியை சேர்ந்த ஜெயக்குமாரியை சந்திப்பதற்கு, அதரது மகளான விபூசிகாகவிற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இன்று கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் இந்த சந்திப்பு நடக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இருவரும் ஒன்றாக கைதானபோதும், பின்னர் விபூசிகா நீதிமன்றத்தின் ஊடாக விடுதலை செய்யப்பட்டு கிளிநொச்சி மகாதேவா சைவச்சிறார் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், தாயரைப்பார்ப்பதற்காக சிறுவர் நன்னடத்தை அதிகாரியின் ஊடாக கிளிநொச்சி நீதிமன்றத்தை நாடியிருந்தமைக்கு அமைவாக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.