பிரபாகரன் இல்லாத களத்தில் என்னை வென்று காட்டட்டும்! மகிந்தவிற்கு சவால் விடும் ரணில்
2005 ஆம் ஆண்டு தேர்தலில் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனோடு சேர்ந்து தன்னைத் தோற்கடித்த மஹிந்த ராஜபக்சவால் இம்முறை தேர்தலில் தன்னுடன் போட்டியிட்டு வெற்றி பெற முடியாதென கூறியிருக்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
“பிரபாகரன் இருந்திருக்காவிட்டால் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாவதை கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க முடியாது. தேர்தலில் வெற்றிபெற கூட்டணி வைத்த பிரபாகரனை, பின்னர் தனது அரசியல் தேவைக்காக அழித்து விட்டார் மஹிந்த. இப்படியான மஹிந்தவிற்கு இனியும் கை கொடுக்க யாரும் இல்லை. முடிந்தால் தன்னோடு நேருக்கு நேர் மஹிந்த களத்தில் நின்று பார்க்கட்டும். இதுவரை ஒரேயொரு தடவையே நேருக்கு நேர் களத்தில் நின்றிருக்கிறோம். அதுவும் பிரபாகரனின் உதவியாலேயே மஹிந்தவால் ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தது” என கூறியுள்ளார்.