காணாமற்போனோார் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அமா்வில் மாற்றம்
காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இம்மாதம் 28 ஆம் திகதி மற்றும் மார்ச் முதலாம் திகதிகளில் குச்சவெளி பிரதேச செயலகத்திலும் 2ஆம், 3ஆம் திகதிகளில் குறித்த அமர்வு திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் தவிர்க்க முடியாத காரணங்களினால் மார்ச் 2ஆம், 3ஆம் திகதிகளில் குறித்த அமர்வு திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்திற்கு இடம்மாற்றப்பட்டுள்ளது.
மேலும் நாளை மறுதினம் குச்சவெளி பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ள அமர்வில் புல்மோட்டை, தென்னமரவாடி, திரியாய், வாழையூத்து, வேலூர் ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்தவர்களும்,
மார்ச் முதலாம் திகதி கோபாலபுரம், இக்பால் நகர், ஜாயாநகர், குச்சவெளி, கும்புறுப்பிட்டி, கும்புறுப்பிட்டி கிழக்கு, கும்புறுப்பிட்டி மேற்கு, நிலாவெளி, பெரிய குளம் ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும், விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
மார்ச் 2ஆம் திகதி திருகோணமலை நகரம் பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ள அமர்விற்கு, அபயபுர, அன்புவழிபுரம், அருணகிரிநாதர், சீனன்குடா, ஜின்னாநகர், கன்னியா, கப்பல்துறை, லிங்க நகர், மனையாவெளி, மட்கோவ், நாச்சிக்குடா, உவர்மலை, பாலையூற்று, பட்டணத்தெரு, புளியங்குளம் ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.