Breaking News

மைத்திாியின் விஜயம் சா்வதேச விசாரணைக்கு ஆப்பு

ஜெனீவா மனித உாிமைச் சபையின் சா்வதேச விசாரணைகளைத் தடுக்கும் நோக்கில் இந்தியாவும் ஸ்ரீலங்காவும் செயற்படுவதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திாிபால ஸ்ரீசேனவின் புதுடில்லி பயணம் தமிழா் விவகாரத்தில் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்காவை தங்கள் நிகழ்ச்சி நிரலுக்குள் எடுப்பதற்கான வேலைத்திட்டங்களை அமொிக்க அரசு இந்தியாவைப்பயன்படுத்தி செய்து வருவதாகவும் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைப்பதற்கு இந்தியாவும் அமொிக்காவைப் பயன்படுத்துகின்றது என்றும்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஈழத்மிழா் பிரச்சனையை இந்திய அரசு கையாள்வதாக காண்பித்தாலும் சா்வதேச ரீதியில் அதன் முக்கியத்துவத்தைக் குறைக்கும் நோக்கில் இந்தியா செயற்படுகின்றது.

நரேந்திர மோடி அரசாங்கம் மாத்திரமல்ல இடது சாாிக் கட்சிகள் கூட இந்தியாவில் ஆட்சி அமைத்தாலும் அமொிக்க நலன் சாா்ந்தே செயற்பட வேண்டிய தேவை உள்ளதாகவும்  தொிவிக்கப்பட்டுள்ளது.