தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் - விக்னேஸ்வரன்
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நியூயோர்க் டைம்ஸிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இது தொடர்பில் காலம் கடத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு செயற்படும் பிரதமர் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்து சிங்கள் மக்களின் வெறுப்பை சம்பாதித்துக்கொள்ள விரும்பமாாட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களிலும் இவ்வாறான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவை செயல் வடிவம் பெறவில்லை எனவும் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.மேலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் சரியான தகவல்கள் எதுவும் இல்லை எனவும், எனினும் நாடு முழுவதிலும் பல அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.