Breaking News

வடக்கு-தெற்கு மக்கள் இடையே ஒற்றுமையை உருவாக்கவேண்டும் -ஜனாதிபதி

கடந்த 30 வருடங்களாக நிலவிய யுத்தம் நிறைவடைந்து நாட்டில் அமைதி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வடக்கு மற்றும் தெற்கு மக்களுக்கு இடையில், ஒற்றுமை உருவாக்கப்படவில்லை. அந்த ஒற்றுமையை உருவாக்கவேண்டிய தேவையுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

67ஆவது சுதந்திர தினத்தின் பிரதான வைபவத்தில் கலந்துகொண்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


பிரதான வைபவம் முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாடாளுமன்ற மைதானத்தில் தற்போது நடைபெற்றுகொண்டிருக்கின்றது.