மஹிந்தவின் ஊரில் இரகசிய ஆயுதக் களஞ்சியங்கள் - சஜித் தகவல்
ஸ்ரீலங்காவின் தென் பகுதியின் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் இரண்டு பிரதேசங்களில் முன்னைய அரசாங்கத்தினால் இரண்டு ஆயுதக் களஞ்சியங்கள் இரகசியமாக பேணப்பட்டுவந்ததாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
ஜனாதிபதி தேர்தலின் பின்னரான வன்முறைகள் தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இந்த விசேட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சர் சஜித் பிரேமதாஸ இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதன்படி பெலியத்த மற்றும் வீரகெட்டிய ஆகிய இரண்டு பிரதேசங்களிலேயே இந்த இரகசிய ஆயுதக் களஞ்சியங்கள் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.இதேவேளை ஜனாதிபதி தேர்தலின் போதும், அதன் பின்னரான காலப்பகுதிகளிலும் வன்முறைகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா இதன்போது வலியுறுத்தினார்.