மகிந்த அரசினது மாளிகைகள் ஹோட்டல்களாக மாற்றம்
மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தினால் அறுகம்பே மற்றும் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகைகள் இரண்டும் ஹோட்டல்களாக மாற்றப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
காலியில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த மாளிகைகள் ஜனாதிபதி செயலக நிதியத்திலிருந்தே நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் இவற்றை நிர்மாணிப்பதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதி பெற்றுக்கொள்ளவில்லை என்றும் அவற்றை நிர்மாணிப்பதற்காக 90 பில்லியன் ரூபாவுக்கு அதிகமாக தொகை செலவிடப்பட்டுள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.