Breaking News

சிவாஜியின் பிரேரணை இன்றைய அமர்வில் முன்மொழியப்படும்

மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தால் கடந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வடக்கு மாகாணசபையின் இன்றைய அமர்வில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. 

தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையில் இருந்து பாதுகாக்க சர்வதேச பொறிமுறை ஏற்படுத்துமாறு வேண்டுகோள் - என்ற தலைப்பில் கடந்த ஆண்டு மாகாண சபையில் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் குறித்த பிரேரணை வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனால் விசேட அறிக்கையும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டு அதற்கு ஆதாரமான நீண்ட உரையை ஆங்கிலத்தில் வழங்கி முன்மொழியவுள்ளார். 

அதனைதொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் 30 பேரும் எழுந்து நின்று வழிமொழியவுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் சபை அமர்வில், இலங்கை தொடர்பிலான போர்க்குற்ற விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படாமல் பிற்போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் வடக்கு மாகாண சபையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பிரேரணை இன்று எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.