Breaking News

மைத்திரியின் குழப்பகரமான சமிக்ஞை! கவலையில் இந்தியா

இலங்கையின் புதிய அரசாங்கத்திடமிருந்து வெளிப்படும் சில குழப்பகரமான சமிக்ஞைகளால் இந்திய அரசாங்கம் கவலை அடைந்துள்ளதாக டெலிகிராவ் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விஜயத்திற்கான ஏற்பாடுகளை புதுடில்லி மேற்கொண்டுள்ள அதேவேளை தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் தொடர்பாக கொழும்பிலிருந்து வரும் குழப்பகரமான சமிக்ஞைகள் காரணமாக மகிந்த ராஜபக்சவின் தோல்விக்கு பின்னர் தோன்றிய பாரிய எதிர்பார்ப்பை இந்திய இராஜதந்திர வட்டாரங்கள் குறைத்துக்கொண்டுள்ளதாக மூத்தஅதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எங்களது தரப்பிலிருந்து சிறிசேன அரசாங்கம் குறித்து பலத்த எதிர்பார்ப்புள்ளது, அவரது விஜயம் இந்த விடயத்தில்கு குறிப்பிடத்தக்க பலனை அளிக்கும் என எதிர்பார்க்கிறோம், என தெரிவித்துள்ள இலங்கை விவகாரங்களில் பரீட்சயம் உள்ள மூத்த அதிகாரியொருவர்,எனினும் சில முக்கிய விடயங்களில் தெளிவின்மை காணப்படுகின்றது, அது குறித்த தெளிவுபடுத்தல்களுக்காக காத்திருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் புதிய அரசாங்கம் நல்லெண்ண சமிக்ஞைகளை வெளிப்படுத்தியுள்ள போதிலும்,முன்னைய அரசாங்கத்தினால் தடுக்கப்பட்ட இந்திய உதவியுடனான பல திட்டங்களுக்கு புதிய அரசாங்கம்அனுமதி வழங்குவதற்காக புதுடில்லி காத்திருக்கின்றது.

இந்த திட்டங்களை முன்னெடுப்பதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசத்தை வழங்க புதுடில்லி தயாராகவுள்ளது.இதேவளை சீனாவின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் குறித்து தேர்தல் பிரச்சார காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளிலிருந்து இலங்கையின் புதிய அரசாங்கம் பின்வாங்கியுள்ளது போல தோன்றுகிறது எனவும் டெலிகிராவ் குறிப்பிட்டுள்ளது.