துமிந்த சில்வாவை கைது செய்யாமல் இருப்பது சிக்கலான விடயம் -ஹிருணிக்கா
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை கைது செய்யாமல் இருப்பது சிக்கலான விடயம் என ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார். போதைப் பொருள் வியாபாரம் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள துமிந்த சில்வா தொடர்பில் குற்ற புலனாய்வு பிரிவு மேற்கொள்கின்ற விசாரனை நடவடிக்கை ஊடுருவல் குறைவாக இடம் பெறுவதாகவும். இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளவரை கைது செய்யாமல் இருப்பது சிக்கலான விடயம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் துமிந்த சில்வாவிற்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் முன்வைப்பதற்கான நடவடிக்கைகள் இடம் பெறுவதாக அவர் தெரிவித்தார்.