தோல்விக்குப் பின் மீண்டும் அரசியல் மேடையில் ஏறுகிறார் மகிந்த
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பின்னர், முதல் முறையாக பொதுமக்கள் முன்பாக அரசியல் மேடை ஒன்றில் தோன்றவுள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ஓரம்கட்டுப்பட்டு வரும் நிலையில், மகிந்த ராஜபக்சவை முன்னிறுத்தி, புதிய அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் தினேஸ் குணவர்த்தன மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
மக்கள் ஐக்கிய முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி உள்ளிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னைய கூட்டணிக் கட்சிகள் இணைந்து, மகிந்த ராஜபக்சவை முன்னிறுத்திப் புதிய கூட்டணியை உருவாக்கவுள்ளன.
இந்தப் புதிய கூட்டணியின் முதலாவது கூட்டம், வரும் 18ம் நாள் நுகேகொடவில் இடம்பெறவுள்ளது.இந்தக் கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.