Breaking News

இங்­கி­லாந்­துக்கு எதி­ரான போட்­டியில் கிளார்க் பங்­கு­பெ­ற­மாட்டார்



உலகக் கிண்­ணத்­தொ­டரின் முதல் போட்­டியில் போட்­டியை நடத்தும் நாடா ன அவுஸ்­தி­ரே­லியா இங்­கி­லாந்தைச் சந்­திக்­கின்­றது. இப்­போட்­டி­ நா­ளைய தினம் நடை­பெ­ற­வுள்ள நிலையில் ஆஸி.யின் அணித்­த­லைவர் மைக்கல் கிளார்க் இப்­போட்­டியில் பங்­கேற்­க­மாட்டார் என பயிற்­சி­யாளர் டரன் லீமன் அறிவித்துள் ளார்.

நேற்று முன்­தினம் ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­திற்கு எதி­ரான போட்­டியில் கிளார்க் ஆரம்­பத்­து­டுப்­பாட்ட வீர­ராக கள­மி­றங்கி 64ஓட்­டங்­களைப் பெற்றிருந்தார்.

அவ்­வா­றி­ருக்­கையில் சத்­திர சிகிச்சை மேற்­கொண்­டுள்ள அவ­ருக்கு காயத்தின் தாக்கம் தொட­ரக்­கூ­டாது என்­ப­தற்­காக இந்­தப்­போட்­டியில் ஓய்வளிக்கப்பட்டுள்­ள­தா­கவும் பங்­க­ளா­தே­ஷுக்கு எதி­ரான போட்­டியில் களமிறங்­குவார் எனவும் மேலும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.