வீரவன்ஸவின் மனைவியை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்ற உத்தரவு
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவங்சவின் மனைவியான ஷசி வீரவங்ச, நாளை 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை வைத்தியசாலையிலிருந்து சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்ட இன்று உத்தரவிட்டுள்ளார்.
அவருக்கு தேவையான மருத்து உதவிகளை சிறைச்சாலை வைத்தியசாலையிலேயே பெற்றுக்கொடுக்குமாறும் பிரதான வைத்திய அதிகாரி சோதித்ததன் பின்னர் தேவையேற்பட்டால் தேசி வைத்தியசாலைக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சரின் மனைவி 2010ஆம் ஆண்டு பொய்யான தகவல்களை கொடுத்து இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அந்த கடவுச்சீட்டு 2009ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் திகதி காலாவதியான அவரது சாதாரண கடவுச்சீட்டுடன் ஒப்பிட்டு பார்க்கையில் அதில் அடங்கியுள்ள தகவல்கள் வித்தியாசமானதாக காணப்பட்டதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.