Breaking News

மைத்திரி அரசுக்கு மஹிந்த அமரவீர எச்சரிக்கை

அரசை தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கவிழ்ப்பதற்கான இயலுமை உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ரன்ன பகுதியில் நேற்று நடைபெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், எந்தவொரு சந்தர்ப்பத்திலேனும் அரசை நாம் கைப்பற்ற முடியும். இன்று கூட எமக்கு தேவை ஏற்பட்டால் நாடாளுமன்றத்தில் கையொப்பிமிடப்பட்ட பிரேரணையொன்றை முன்வைத்து எமது பிரதமர் ஒருவரை நியமிக்க முடியும். எமது அமைச்சரவையை நியமிக்க முடியும். புதிய ஜனாதிபதிக்கு கௌரவம் செலுத்தும் வகையிலேயே இந்த நூறுநாள் நிருவாகத்தை முன்னெடுக்க இடமளித்துள்ளோம். 

 ஆனால் இந்த அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாம் ஒத்துழைப்போம் என்பது இதன்மூலம் புலப்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களை நோக்குமிடத்து பொலிஸாருக்கு பொறுப்பாக உள்ள அமைச்சர் கடமையை நிறைவேற்றத் தவறியமை தெரியவந்துள்ளது. இன்னும் சில நாட்களில் பொலிஸார் உரிய முறையில் கடமையை நிறைவேற்றவில்லை என்பது உறுதியானால் பொலிஸ் துறைக்கு பொறுப்பான அமைச்சரை தொடர்ந்தும் அந்த பதவியில் வைத்திருப்பதா இல்லையா என்பதை நாம் தீர்மானிக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.