வன்னேரிக்குளத்தில் யானைகள் அட்டகாசம்!
வன்னேரிக்குளம், இரண்டு ஏக்கர் பகுதியில் குடிமனைக்குள் புகுந்த யானைகள் 15இற்கு மேற்பட்ட தென்னைகளை முறித்து சேதப்படுத்தியுள்ளன..
இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. வன்னேரிக்குளத்தில், தனியார் ஒருவரது காணிக்குள் புகுந்த யானைகள் அங்கு நின்ற தென்னைகள் ,மற்றும் வாழைகள், வீட்டுத்தோட்டப் பயிர்கள் போன்ற வற்றை சேதப்படுத்தியுள்ளன.
வன்னியில் தற்போது அறுவடைகாலம் நடைபெற்றுக் கொண்டிருப்பதனால் நாளுக்கு நாள் யானைகளின் தொல்லைகள் அதிகரித்துச் செல்வதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இது தெடா்பாக உரிய அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர். அதற்கு அடுத்த கட்டமாகவே நேற்றைய தினம் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணிக்குள் புகுந்த யானைகள்,தென்னை ,வாழை மற்றும் வாழ்வாதாரப்பயிர்களை சேதப்படுத்தியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.