Breaking News

யுத்தத்தின்போது உயிரிழந்தவர்களுக்கு முள்ளிவாய்க்காலில் நினைவாலயம்!

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது உயிரிழந்தவர்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவாலயம் ஒன்றை அமைப்பதற்கு வட மாகாண சபை ஒத்துழைப்பு வழங்குமென முதலமைச்சர் சீ.வி.வின்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வட மாகாணசபையின் 25ஆவது அமர்வில் இன்று கூடியபோது,முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் நினைவாலயம் அமைப்பது தொடர்பில் வாய்மொழி மூல வினாவை எழுப்பினார், இதற்குப் பதிலளித்த முதலமைச்சர்  இந்த விடயத்திற்கு சபை முழுமையான ஒத்துழைப்பினை வழங்குமென குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் திகதி மாகாண சபையில் குறித்த நினைவாலயம் அமைப்பது தொடர்பிலான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. எனினும் பொருத்தமான காலம் வரும்போது இது தீர்மானிக்கப்படுமென முதலமைச்சர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று தனது தீர்மானத்தை அவர் அறிவித்துள்ளார்.

எனினும் குறித்த நினைவாலயம் அமைப்பதற்கு மாகாண சபை நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளாது எனவும், பொதுமக்கள் இணைந்து குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்தால் அதற்கென நிதியம் ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.