Breaking News

ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண புதிய வழி உருவாகும்

இலங்கை தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான புதிய வழி உருவாகும் என்று இந்திய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அந்நாட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியா வருகிறார். பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்திக்கிறார். இந்த சந்திப்புக்குப் பிறகு இந்திய - இலங்கை உறவில் திருப்பம் ஏற்படும். 

இலங்கை தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான புதிய வழி உருவாகும். தமிழக மீனவர்களின் உரிமைகளையும் பாதுகாக்க முடியும். இலங்கை தமிழர்களுக்கு அனைத்து அதிகாரங்களும் கிடைக்க பாஜக துணையாக இருக்கும் என்றார்.