மகிந்தவின் ஊழல்கள் தொடர்பில் புதிய அரசின் நடவடிக்கைகள் திருப்தியில்லை - அர்ஜூன
கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு வரும் ஊழல் மோசடிகள் தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து திருப்தி அடைய முடியாது என துறைமுக மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கடந்த மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் பாரியளவில் ஊழல் மோசடிகள் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வரும் விசாரணைகள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் குறித்து திருப்தி அடைய முடியாது.
துறைமுகம் மற்றும் விமான நிலையம் ஆகியவற்றில் பாரியளவில் மோசடிகள் இடம்பெற்றுள்ளன.ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் இந்த விடயம் அம்பலமாகியுள்ளது.இது குறித்து விரிவான விசாரணைகள் நடாத்தி குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தராதரம் பாராது தண்டிக்கப்படுவர்.
விமான நிலையம், சிவில் விமான சேவை அதிகார சபை, துறைமுக அதிகார சபை போன்றன தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது என அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.