புலிகளின் முகாம் இல்லை - தென்னாபிரிக்கா
தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்று தென்னாப்பிரிக்காவில் இருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை தென்னாப்பிரிக்காவின் புலனாய்வுதுறை மறுத்துள்ளது.
தென்னாப்பிரிக்காவினால் அனுப்பப்பட்டதாக கூறப்படும் இரகசிய ஆவணம் ஒன்றை மேற்கோள்காட்டி, அல் ஜெசீரா இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இலங்கையில் யுத்தம் நிறைவடைந்த பின்னர், 2010ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் விடுதலைப் புலிகள் பயிற்சி முகாமை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதில் அவுஸ்திரேலியா, கனடா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தமிழ் இளைஞர்கள் பயிற்சி பெற்று வந்ததாகவும் கூறப்பட்டது. எனினும் அவ்வாறான முகாம் எதுவும் தென்னாப்பிரிக்காவின் எந்த பகுதியிலும் செயற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.