மஹிந்தவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய அமைச்சர் பதவி விலகல்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வந்த கனேடிய வெளியுறவு அமைச்சர் ஜோன் பெய்ர்ட் தமது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபரில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கனேடிய கொன்சவேட்டிவ் அரசாங்கத்தில் இருந்து அவர் விலகியமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த தேர்தலில் கொன்சவேட்டிவ் கட்சி, லிபரல் கட்சியுடன் பாரிய சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ரொயட்டர் தெரிவித்துள்ளது.
ரஷ்யா தொடர்பான கொள்கையில் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பருடன் ஏற்பட்ட முறுகலே இந்த பதவி விலகலுக்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் வர்த்தகங்கள் மீது தடைகளை விதிக்குமாறு பெய்ர்ட் வலியுறுத்தி வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.