Breaking News

கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு சுமந்திரன் அழைப்பு

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி செயற்பட வேண்டும் இதற்கான பகிரங்க அழைப்பை இந்த இடத்தில் விடுக்கிறேன் என தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் நல்லூர்ப் பகுதியில் தனியார் விடுதி ஒன்றில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அழைப்பை விடுத்தார். 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸிலில் சமர்ப்பிக்கப்படவிருந்த போர்க்குற்ற அறிக்கை, அடுத்த செப்டெம்பர் அமர்வுக்கு தள்ளிப்போடப்பட்டுள்ளமை எமக்கு வருத்தமளிக்கிறது. அந்த அறிக்கையை 28 ஆவது அமர்வில் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை சர்வதேசத்திடம் நாம் வலியுறுத்தியிருந்தோம். 

எனினும் அது சாத்தியமாகவில்லை. இருந்த போதிலும் காலம் தாழ்த்தி சமர்ப்பிக்கப்படும் அறிக்கை வலுவானதும் நம்பிக்கையானதுமாக இருக்கும் என்று நாம் நம்புகிறோம். அத்தகைய ஒளிக்கீற்றே தென்படுகிறது .- என்றார். இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் இணைந்து செயற்படவேண்டும். இதன் மூலம் தமிழ் மக்களின் அரசியலை ஒன்றிணைந்து பலப்படுத்தமுடியும். இந்த சந்தர்ப்பத்தில் அதற்கான அழைப்பை நான் விடுக்கிறேன் என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.