Breaking News

மலையக மக்கள் முன்னணி ஐ.தே.கவுடன் இணைய தீர்மானம்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தாங்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக மலையக மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. 

மல்வத்து பீட தேரரை சந்தித்து மத வழிபாடுகளில் கலந்து கொண்டதன் பின்னர் மலையக மக்கள் முன்னிணியின் தலைமை அமைச்சர் வீ.ராதாகிருஷ்ணன் ஊடகத்திடம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.தங்கள் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அனைவரும் குறித்த தீ்ர்மானத்திற்கு உடன்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.