துப்பாக்கிச்சத்தம் ஓய்ந்துள்ளமை உண்மையான சமாதானமாகாது - ரவூப் ஹக்கீம்
நாட்டில் துப்பாக்கிச்சத்தம் ஓய்ந்திருப்பது உண்மையான சமாதானம் ஏற்பட்டுவிட்டதாக அர்த்தப்படாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகரஅபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இலங்கை வந்துள்ள தென்னாபிரிக்காவின் சர்வதேச தொடர்புகளுக்கும்,ஒத்துழைப்புகளுக்குமானபிரதியமைச்சர் நொமயின் டியாமேபிக்கிடோ தலைமையிலான உயர்மட்டக் குழுவினரை நேற்று சந்தித்து உரையாடியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தைஏற்படுத்துவதற்கும்,யுத்தத்தினால் அழிவுகளை சந்தித்தநாட்டை கட்டியெழுப்புவதற்கும் தென்னாபிரிக்கஅரசாங்கம் இலங்க்கை வழங்கும் ஒத்துழைப்புக்கும் அமைச்சர் ஹக்கீம் இதன்போது நன்றிதெரிவித்தார்.
இலங்கை வந்துள்ள தென்னாபிரிக்கவின் உயர்மட்ட தூதுக்குழுவினர் முஸ்லிம் காங்கரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீமை கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் நேற்று புதன்கிழமை சந்தித்துநீண்டநேரம் கலந்துரையாடினர். இலங்கைக்கான தென்னாபிரிக்கா உயர்ஸ்தானிகர் ஜிஒப் கியு.எம்.டொயிட்ஜ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளரும்,கல்முனை மேயருமான சட்டத்தரணிநிசாம் காரியப்பர்,கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ் ஆகியோரும் இச்சந்திப்பில் பங்குபற்றினர்.
இந்தச் சந்திப்பில் கருத்து வெளியிடுகையில்,
ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு இந்நாட்டின் சிறுபான்மைச் சமூகங்கள் அளித்த ஆதரவுமகத்தானது என தூதுக் குழுவினரிடம் சுட்டிக்காட்டியஅமைச்சர் ஹக்கீம்,வடகிழக்கிலும், நாட்டில் சிறுபான்மைச் சமூகங்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலும் புதிய ஜனாதிபதிக்குதேர்தலில் அமோக வெற்றிகிடைத்தது.இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும், நாட்டைகட்டியெழுப்புவதற்கும் தென்னாபிரிக்காபால
மாக உள்ளது.
இனங்கிடையிலான விரிசலை தவிர்ப்பதற்கு மக்கள் மத்தியில் நிலவும் சந்தேகங்களைப் போக்கி,நம்பிக்கையைகட்டியெழுப்பவேண்டியது அவசியம்.
அதற்கானமுயற்சியில் தென்னாபிரிக்காபோன்றநாடுகளின் ஒத்துழைப்பு இன்றியமையாதது.
முஸ்லிம்களும் முப்பதுஆண்டுகாலம் நீடித்தயுத்தத்தின் விளைவாகதங்களது உயிர்களையும், காணிகளையும், உடைமைகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.
அமைச்சர் கூறியவற்றைசெவிமடுத்ததென்னாபிரிக்க பிரதியமைச்சர் நொமயின்டியா மேபிக்கிடோ தங்களது நாடும் இனவேறுபாட்டினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்ததாகவும்,தங்களில் பலரும் பயங்கரவாதிகளென அடையாளப்படுத்த ப்பட்டிருந்ததாகவும்,சிறைவாசம் கூட அனுபவிக்கநேர்ந்ததாகவும் கூறினார். எல்லாதடைகளையும் தாண்டி தென்னாபிரிக்காவில் நல்லாட்சி மலர்ந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
தென்னாபிரிக்காவில் உண்மையைக் கண்டறிவதற்கும். நல்லிணக்கத்திற்குமான குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கைகளை ஒத்த முன்னெடுப்புகள் இலங்கை போன்ற நாடுகளுக்கு சிறந்த முன்னுதாரணமென்றும் அந்நாட்டு பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.