காணாமல் போனோர் ஜனாதிபதி ஆணைக்குழு காலம் நீடிப்பு
காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் ஆகஸ்ட் 15 வரை இந்த காலநீடிப்பு செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே இதன் காலமுடிவு 2015 பெப்ரவரி 15 என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் ஆணைக்குழு, தமது வழமையான விசாரணைகள் மற்றும் வாக்குமூலங்களை பெறும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று ஆணைக்குழுவின் செயலாளர் S.W.குணதாஸ தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி செயலத்தில் இருந்தே தமது பணிகளை தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குணதாஸ குறிப்பிட்டுள்ளார்.