Breaking News

உள்நாட்டு விசாரணை மீது ஐ.நா மதிப்பீடு செய்யுமாம்!

இனப்படுகொலை தொடர்பில் உள்நாட்டு விசாரணை மீது ஐ.நா மீதிப்பீடு செய்யும் என ஐ.நாவின் பொதுச் செயலாளரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹன் ஹக் தெரிவித்துள்ளார். 

 புதிய அரசு பொறுப்புக் கூறும் உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றை உருவாக்கத்திட்டமிட்டுள்ளது. இது குறித்து ஐ.நா பொதுச் செயலாளர் அறிவார். அதன்படி உள்நாட்டுப் பொறிமுறையின் முன்னேற்றங்கள் குறித்து கவனமாக மதிப்பீடு செய்யப்படும். ஐ.நா மனித உரிமைகள் சபையின் மார்ச் மாத அமர்வில் இனப்படுகொலை தொடர்பிலான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அறிக்கை பிற்போடப்பட்டுள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஐ.நா சபையின் ஆணையை மனித உரிமை ஆணையாளர் நிறைவேற்றுவார் என்பதில் அமெரிக்கா முழு நம்பிக்கையுடன் உள்ளது. அவர் தனது ஆணையை எவ்வாறு சிறந்த முறையில் முன்னெடுக்கலாம் என்ற வழிகாட்டல்களை வழங்கவும் நாம் தயாராக உள்ளோம். அத்துடன் தாமதிக்க எடுக்கப்பட்ட முடிவுக்கு நாமும் ஆதரவு வழங்குகின்றோம்.

கிடைக்கின்ற தகவல்களைக் கொண்டு சமர்ப்பிக்கக் கூடிய அறிக்கை, சபைக்கும் இலங்கை மக்களுக்கும் போரின் போது என்ன நடந்தது என்று இன்னும் தெளிவான விளக்கத்தைக் கொடுக்கும் என்று நம்பகின்றோம். இலங்கையின் சகல மக்களுக்கும் பொறுப்புக் கூறல், நீதி , நல்லிணக்கம், மற்றும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் உறுதிப்பாட்டில் அமெரிக்கா இருக்கின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.