Breaking News

கௌரவ சொற்பதங்களில் என்னை அழைக்க வேண்டாம் - ஜனாதிபதி

நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு இளைஞர்களின் பங்களிப்பு முக்கியமானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள ஊடகங்களுக்கு வழங்கி வரும் விசேட நேர்காணலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.கடந்த அரசாங்கத்தை தோற்கடிக்க இளைஞர் யுவதிகள் முக்கியமான ஒத்துழைப்பை வழங்கினர். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அரசாங்கத்தை தோற்கடிக்க ஒத்துழைப்பு வழங்கினர்.

மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த அவர்கள் எதிர்பார்ப்புடன் எடுத்த முயற்சி பாராட்டுக்குரியது. இளைஞர் யுவதிகளின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படும்.100 நாள் திட்டத்தை முன்னெடுப்பது அவ்வளவு சுலமான காரியமல்ல.

அதீதிதமான அதிகாரங்கள் ஜனாதிபதிக்கு காணப்பட்டாலும், நாடாளுமன்றின் ஒத்துழைப்பின்றி 100 நாள் திட்டத்தை அமுல்படுத்த முடியாது.இரண்டாண்டுக்காவது தேசிய அரசாங்கமொன்றின் மூலம் ஆட்சி நடத்த முயற்சிக்க வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பிர்களின் ஒத்துழைப்பின்றி 100 நாள் திட்டம் வெற்றியளிக்காது.நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவேன் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.அதி மேன்மை தாங்கிய என என்னை விளிக்க வேண்டாம் - ஜனாதிபதி

அதி மேன்மை தாங்கிய என தம்மை விளிக்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.அதி மேன்மை தாங்கிய, அதி வணக்கத்திற்குரிய, சேர், கௌரவ ஜனாதிபதி என்றெல்லாம் என்னை விளிக்கக் கூடாது.இவ்வாறான விசேட சொற்பதங்களைக் கொண்டு என்னை அழைக்கக் கூடாது என்பது பற்றி அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிப்பேன்.

எனது துணைவியை ஜனாதிபதியின் பாரியார் என்றெல்லாம் அழைக்க வேண்டாம் என ஜனாதிபதி கோரியுள்ளார்.ஜனாதிபதி பங்கேற்ற முதலாவது நேர் காணல் நிகழ்ச்சியில் இதனைத் தெரிவித்துள்ளார்.