Breaking News

போர்க் குற்றம் தொடர்பில் மகிந்தவிடம் விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ச மீது போர்க் குற்றம் தொடர்பில் உள்ளக விசாரணை மேற்கொள்ளப்படும் என பெருந்தோட்டதுறை இராஜங்க அமைச்சர் க. வேலாயுதம் தெரிவித்துள்ளார். 

 இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் வேலாயுதம், தி.மு.க. தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சுமார் 1 மணி நேரம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''தி.மு.க. தலைவர் கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். 

இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தற்போது உள்ள அரசியல் மாற்றம் குறித்தும், அரசியல் சூழ்நிலை குறித்தும், தமிழ் மக்களின்நிலை குறித்தும் அவரிடம் எடுத்து கூறினேன். ராஜபக்ச மீதான போர்க் குற்றம் குறித்து இலங்கை அளவில் விசாரணை மேற்கொள்ளப்படும். முகாம்களில் உள்ள தமிழர்கள் மீண்டும் அவர்கள் வாழ்விடத்திற்கு செல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறோம். 

 இராணுவம் அதிகம் உள்ள முகாம்களில் இருந்து இராணுவத்தினர் திரும்ப பெறப்படுவார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் தமிழர்களுக்கு வேலை வழங்கி வருகிறோம். அவர்களின் குழந்தைகளின் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். 

 அத்துடன் மலையக தமிழர்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. உலகம் முழுவதும் இலங்கை அகதிகள் என்ற வார்த்தை இருக்க கூடாது என்று விரும்புகிறோம். அதனால், மற்ற நாடுகளில் உள்ள இலங்கை தமிழர்கள் நாடு திரும்ப வேண்டும். இலங்கையில் தற்போது அமைதியான சூழ்நிலை நிலவுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்