Breaking News

செயற்குழு கூட்டம் 8ஆம் திகதி

இந்திய கிரிக்கெட் சபையின் செயற்குழு கூட்டம் எதிர்வரும் 8ஆம் திகதி சென்னையில் இடம்பெறவுள்ளது.

இந்தியன் பிரிமியர் லீக் போட்டியின் சூதாட்ட வழக்கில் கடந்த 22ஆம் திகதி தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம் எதிர்வரும் 6 வார காலத்திற்குள் இந்திய கிரிக்கெட் சபையின் புதிய நிர்வாகிகள் தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

அதனடிப்படையில், இந்திய கிரிக்கெட் சபைக்கான புதிய நிர்வாகிகளை தெரிவு செய்வதன் பொருட்டு இந்த செயற்குழு கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.