இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் சுன்னாகத்தில் இரத்த தான முகாம்
இலங்கையின் 67 வது சுதந்திர தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக இன்றைய தினம் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்றை நடத்த சுன்னாகம் ஐயனார் இளைஞர் கழகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
இன்று சுன்னாகம் ஐயனார் சனசமூக நிலைய மண்டபத்தில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5.30 மணிவரைக்கும் இரத்ததான முகாம் இடம்பெறும் என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இரத்தம் வழங்கும் இந் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்கமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.