Breaking News

இந்தியா- பாகிஸ்தான் போட்டிக்காக ரூ.500 கோடிக்கு மேல் சூதாட்டம்

இந்தியா பாகிஸ்தான் போட்டியை முன்னிட்டு இந்தியாவில் மாத்திரம் ரூ.500 கோடிக்கு மேல் சூதாட்டம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன.

இந்தியாவின் பெங்களூர் பகுதிகளில் சுமார் ரூ.300 கோடிகளுக்கும் அதிகமாக சூதாட்டம் நடைபெற்றுள்ளது. அதுமாத்திரமின்றி மைசூர் போன்ற மாநிலங்களின் பகுதிகளில் பல்வேறு இடங்களில் சுமார் ரூ.200 கோடிகளுக்கும் அதிகமான சூதாட்டம் நடைபெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதில் இந்திய வீரர்களான விராட் கோஹ்லி, ரோகித் ஷர்மா மற்றும் முஹமது ஷமி மற்றும் பாகிஸ்தான் வீரர்களான யுனிஸ்கான், அப்ரிடி, மிஸ்பா ஆகியோர் மீதும் அதிகளவில் பந்தய பணம் கட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.