உலக கிண்ண பயிற்சிப் போட்டிகள்! 4 விக்கட்டுகளால் அயர்லாந்து வெற்றி
பங்களாதேஸ் மற்றும் அயர்லாந்து ஆகிய கிரிக்கட் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற பயிற்சி போட்டியில், அயர்லாந்து 4 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஸ் அணி 189 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.பதிலளித்து துடுப்பாடிய அயர்லாந்து அணி 46.5 ஓவர்களில் வெற்றி இலக்கை கடந்தது.
இதேவேளை மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்றிருந்த பிரிதொரு பயிற்சி போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 3 ஓட்டங்களால் வெற்றியை பெற்றது.இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 313 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.பதிலளித்து துடுப்பாடிய ஸ்கொட்லாந்து 50 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 310 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.