இந்திய மீனவர்கள் 43 பேர் கைது
இந்திய மீனவர்கள் 43 பேர் வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எல்லை தாண்டிவந்து சட்டவிரோதமாக மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் 5படகுகளில் வந்த 43 இந்திய மீனவர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது காங்கேசன்துறையில் வைத்து குறித்த 43 பேரும் யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் நீரியல் வளத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் குறித்த மீனவர்கள் 43 பேரும் இன்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படுவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது .