Breaking News

வவுனியா - மதவாச்சி பிரதான வீதியில் விபத்து! 4 பேர் பலி; 13 பேர் காயம்

வவுனியா - மதவாச்சி பிரதான வீதியில் லொறி ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர். 

தண்டவாளக் கேடர்களை ஏற்றிக் கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த லொறி ஒன்று வளைவு ஒன்றில் திரும்ப முற்பட்டபோது தடம்புரண்டதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.