Breaking News

புதிய அரசின் அடுத்தாட்டம் ஆரம்பம்! 36 இராஜதந்திரிகளை நாடு திரும்ப உத்தரவு

அரசியல் செல்வாக்கில் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் இராஜதந்திரிகளாக நியமிக்கப்பட்ட 36 பேரை நாடு திரும்புமாறு  வெளிவிவகார அமைச்சு பணித்துள்ளது.

கடந்த புதன்கிழமை நடந்த கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில், அரசியல் செல்வாக்கில் இரண்டாவது, மூன்றாவது செயலர்களாகவும், மினிஸ்டராகவும், நியமிக்கப்பட்ட 36 பேரையே நாடு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது,

இவ்வாறு திருப்பி அழைக்கப்பட்டோரில், பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் முன்னாள் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹுலுகல்லவும் அடங்கியுள்ளார்.அவர் தற்போது அவுஸ்ரேலியாவில் பணியாற்றி வருகிறார்.

அதேவேளை, அரசியல் செல்வாக்கில் தூதுவர்களாக நியமிக்கப்பட்ட 29 பேரை நாடு திரும்புமாறு புதிய அரசாங்கம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.