19 பேரை கடத்தி கோத்தபாய கொன்றார்! மேர்வின் பரபரப்பு வாக்குமூலம்
போதைப்பொருள் வர்த்தகர்கள் என சந்தேகித்த 19 பேரை கோத்தபாய ராஜபக்ச கொலை செய்தது தனக்கு தெரியுமென பரபரப்பு வாக்கு மூலமளித்துள்ளார் மேர்வின் சில்வா.
கொழும்பை சேர்ந்த அவர்களை, போதைப்பொருள் வர்த்தகரான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் சேர்ந்து கோத்தபாய கொலை செய்ததாக குற்றம் சுமத்தியுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் போது இந்த பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார்.
அண்மையில் வெலிக்கடை சிறைச்சாலையில் 27 இளைஞர்கள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு, அந்த சம்பவத்திற்கும் கோத்தபாயவிற்குமிடையிலுள்ள தொடர்பு பற்றி தான் அறிந்திருக்கவில்லையென்றார். எனினும், அந்த சம்பவத்தின் போது, குறிப்பிட்ட இளைஞர்களின் பெயரை கூறி தேடித்தேடி கொல்லப்பட்டதாகவும், அப்படி நடந்ததை வத்து பார்க்கும்போது அவை கோத்தபாயவின் உத்தரவிற்கு அமைவாகவே நடந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறினார்.