அத்தியாவசியப் பொருள்களின் புதிய விலை விபரம்
நாடாளுமன்றில் தற்போது இடம்பெற்றுவரும் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் சமர்பிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலைப் பட்டியல்
மகாபொல 5000 ரூபாவாக அதிகரிப்பு,மாசி கிலோ ஒன்று 200ரூபாவால் குறைப்பு-அரச வங்கிகளில் 2 லட்சம் ரூபாவுக்கு மேல் நகை அடகு வைத்திருப்பவர்களுக்கான வட்டி தள்ளுபடி
சமையல் எரிவாயுவின் விலை 300ரூபாவால்
கொத்தமல்லி 30 ரூபாவால் குறைப்பு
உழுந்து கிலோவொன்றுக்கு 60 ரூபாவால் குறைப்பு
பாசிப்பயறு 1 கிலோவின் விலை 30 ரூபாவால் குறைப்பு
நெத்தலி கருவாட்டுக்கு 15 ரூபாவால் குறைக்கப்படும்.
டின்மீன் விலை 60 ரூபாவால் குறைப்பு
சீனியின் விலை 10 ரூபாவினால் குறைப்பு
400 கிலோ கிராம் பால்மாவின் விலை 61 ரூபாவால் குறைப்பு
கோதுமை மாவின் விலை 12 ரூபாவால் குறைப்பு
மண்ணெண்ணெய் விலை லீற்றரொன்றுக்கு 6 ரூபாவால் குறைப்பு
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்காக ஒதுக்கப்படும்.
சிறுநீரக நோயாளிகர்களின் கொடுப்பனவுக்காக 2,000 மில்லியன் ஒதுக்கப்படும்
சுகாதாரத் துறைக்கான செலவு 3 சதவீதத்தால் அதிகரிக்கும்.
வைத்தியசாலைகளின் வெளி நோயாளர் பிரிவு 24 மணி நேரமும் திறந்திருக்கும்.
தூய பால் லீற்றரொன்றுக்கு 70 ரூபாய் நிவாரண விலை.
கொழும்பு நகரில் மீண்டும் குடியேறும் மக்களுக்கு நிவாரணம்.
பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கும் ஒதுக்கப்படும் நிதி 5 மில்லியனிலிருந்து 10 மில்லியனாக அதிகரிக்கப்படும்.
தயட்ட கிருலயில் ஊழல் மோசடி, அதை நிறுத்துவதற்கு யோசனை.
விவசாயிகள், வர்த்தக வங்கிகளுக்கு வழங்க வேண்டிய கடனில் 50 சதவீதம் தள்ளுபடி.
தேயிலை, இறப்பருக்கு நிவாரண விலை.
சிறிய ரக உழவு இயந்திரங்கள் குறைந்த விலையில் பெற்றுக்கொடுக்கப்படும். உர மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.
சமுர்த்திக் கொடுப்பனவு 100 சதவீதம் முதல் 200 சதவீதம் வரை அதிகரிக்கப்படும்.
புதிதாக பிறக்கும் குழந்தைகள் மற்றும் அவர்களில் தாய்மார்களுக்கு 2 வருடங்கள் வரை கொடுப்பனவு.
ஓய்வூதியக் கொடுப்பனவு 1,000 ரூபாவால் அதிகரிக்கப்படும்.
கடந்த அரசாங்கத்தினால் அரசுக்கு 5,000 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டம்.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கு மீன் ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அரச ஊழியர்களின் சம்பளம் பெப்பரவரியில் 5,000 ரூபாவால் அதிகரிக்கப்படும். ஜூன் மாதம் முதல் இன்னும் 5,000 ரூபா அதிகரிக்கப்படும்.
கடந்த அரசாங்கம் பெற்ற கடனை இந்த அரசாங்கம் செலுத்தவேண்டியிருக்கிறது.
தனியார் துறையின் மாதாந்த சம்பளத்தை 2,500 ரூபாவால் அதிகரிக்க கவனம் செலுத்தப்படும்
ஜனாதிபதி பதவியேற்புக்கு 6,000 ரூபா மட்டுமே செலவு. அமைச்சரவையை 71 இலிருந்து 31ஆகக் குறைத்தோம்.
கடந்த வரவு – செலவும் திட்டத்தில் 1,400 பில்லியன் ரூபா வரி வருமானமாக எதிர்ப்பார்க்கப்பட்டது.
கடந்த வரவு – செலவுத் திட்டத்தின் பற்றாக்குறை 521 பில்லியன் ரூபாயாகும்.
இது மொத்த தேசிய உற்பத்தியின் 4.6 சதவீதமாகும்.
100CCக்கு குறைவான வாகனங்களுக்கு 15 சதவீத வரி குறைப்பு
அதி சொகுசு வாய்ந்த வீடுகளுக்கு வருடாந்தம் ஒரு மில்லியன் ரூபாய் இல்ல வரி.