Breaking News

மகிந்தவும் மைத்திரியும் பேயும் பிசாசும்தான்-சிவகரன்


மகிந்தவும் மைத்திரியும் பேயும் பிசாசும்தான் இதனால்தான் அவர்களை ஆதரிப்பதில் இருந்து விலகுகின்றோம் என தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியின் தலைவா் டீ.எஸ் சிவகரன் தெரிவித்துள்ளார்.


இன்று மதியம் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இருவரது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தமிழர்களின் எந்த பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் முன்வைக்க வில்லை.  இந்த சந்தர்ப்பத்தில் கூட்டமைப்பு மைத்திரியை  ஆதரித்தமையானது தமிழ் மக்களின் தீர்வை பின் நோக்கி செல்வதாகவே அமைந்திருக்கின்றது.

அதேவேளை வவுனியாவில் சென்ற மாதம் நடைபெற்ற மத்திய குழுக்கூட்டத்தில் கூட்டமைப்பிடம் தெரிவித்தேன் மைத்திரிக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று அதனால் தமிழ் மக்களுக்கு எந்த தீர்வும் கிடைக்கப்போவதில்லை.அப்படி மைத்திரிக்கு ஆதரவு கொடுத்து தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் அனைவரும் பதவியில் இருந்து விலகவேண்டும் என்று பகிரங்கமா தெரிவித்திருந்தேன்.

 ஆனால் அதனை கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ள வில்லை.இன்று கூட்டமைப்பு மைத்திரியை ஆதரித்திருக்கின்றது.கடும்போக்கு சிங்களக் கூட்டணியெல்லாம் மைத்திரிக்கு ஆதரவு கொடுக்கும் போது கூட்டமைப்பும் மைத்திரிக்கு ஆதரவளிக்க வேண்டுமா?சந்திரிக்கா எமக்கு செய்த கொடுமைகள் எத்தனை அதேபோல் மைத்தரி,பொன்சேகா போன்றோர்கள் எத்தனை தமிழ் மக்களை கொன்று ஒழித்தார்கள்.அதேபோல் மகிந்த எவ்வளவு கொடுமைகளை செய்துள்ளார். இந்த சந்தரப்பத்தில் இரு வேட்பாளர்ளும் பேயும் பிசாசும்தான்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் சரியான தலைமைத்துவம் இல்லை இந்தியாவின் பேச்சையும் மேற்குலகத்தின் பேச்சையும் கேட்டு தமிழ்த் தலைவர்கள் செயற்படுகின்றார்கள்.இதனால் தமிழ் மக்களுக்கு எந்த தீர்வும் கிடைக்கப்போவதில்லை.இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களுக்கு சரியான தலைவர்கள் தேவை என்பதை நான் கூறுகின்றேன். என அவர் தெரிவித்துள்ளார்.