எந்த இரகசிய உடன்படிக்கைகளும் செய்து கொள்ளப்படவில்லை - ஹக்கீம்
கிழக்கில் தனியான முஸ்லிம் நிர்வாக மாவட்டம் தொடர்பிலோ அல்லது வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பிலோ எந்த ஒரு இரகசிய உடன்படிக்கைகளும் செய்து கொள்ளப்படவில்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இரகசிய உடன்படிக்கையை வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் செய்துகொண்டதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. எனினும் இதனை ஹக்கீம் நிராகரித்துள்ளார்.
நேற்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய ஹக்கீம், அம்பாறையில் வாழுகின்ற 96 வீத முஸ்லிம்களுக்காக மேலதிக மாவட்ட செயலாளர் ஒருவர் தொடர்பிலேயே அரசாங்கத்துடன் பேச்சு நடத்தப்பட்டது.
இதன்படி ஒரு மேலதிக செயலாளரும் நியமிக்கப்பட்டார்.இதேபோன்றே வவுனியாவில் வாழும் சிங்களவர்களுக்காக சிங்கள் மேலதிக செயலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.இதனை திரிபுப்படுத்தி அரசாங்கம் பொய்யான செய்திகளை பரப்பி வருவதாகவும் ஹக்கீம் கூறினார்.
சிங்கள மக்களின் வாக்குகளை இலக்கு வைத்தே இந்த பொய் பிரசாரங்களை அராசாங்கம் மேற்கொள்வதாக ஹக்கீம் குற்றம் சுமத்தினார்.